திடீரென நிலத்தில் வீழ்ந்து பரிதாபமாக மரணமான இராணுவச் சிப்பாய்..!!
தம்புள்ள பேருந்து நிலையத்தில் இராணுவச் சிப்பாயொருவர் திடிரென வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பேருந்து நிலையத்தின் பொதுக்கழிப்பறைக்கு முன்பாக (4) இந்த சம்பவம் நடந்தது. அந்த பகுதியில் நின்றவர்கள் சிப்பாயை, முச்சக்கர வண்டியொன்றில் தம்புள்ளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.
கலேவேலாவின் பல்லேபொல பகுதியை சேர்ந்த துஷாரா குமார ஜெயசிங்கவே உயிரிழந்தவர் என அடையாள அட்டையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.சிப்பாய் நிலத்தில் விழுந்து உயிருக்கு போராடிய போது அங்கிருந்தவர்கள் அவருக்கு உதவவில்லை. சுமார் 30 நிமிடங்களின் பின்னரே இந்த பகுதிக்கு வந்த இளைஞர் குழுவினரால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பேருந்து நிலையத்திற்கு வந்த சிப்பாய், கழிப்பறைக்கு சென்று தனது பொருட்களை அங்கு வைத்து விட்டு, கழிப்பறைக்கு சென்றார். பின்னர் வெளியேறி பணம் செலுத்தி விட்டு நகர முற்பட்ட போது, நிலத்தில் விழுந்துள்ளார். அவர் சுவாசிக்க சிரமப்பட்டு, 30 நிமிடங்கள் வரை உயிருக்கு போராடியுள்ளார். எனினும், அங்கிருந்தவர்கள் உதவவில்லை.sor/nl
திடீரென நிலத்தில் வீழ்ந்து பரிதாபமாக மரணமான இராணுவச் சிப்பாய்..!!
Reviewed by www.lankanvoice.lk
on
மே 05, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மே 05, 2020
Rating:



கருத்துகள் இல்லை: