Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் அர்ப்பணிப்பு மிக்க சமூகப் பணியாளர்களுக்கு கௌரவம்!!


மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் அர்ப்பணிப்பு மிக்க சமூகப் பணியாளர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு அதன் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானும் சமூக செயற்பாட்டாளருமாகிய "தேசிய ஜோதி, சாமஸ்ரீ தேசமானிய" உ.உதயகாந்த் தலைமையில் வெகு விமர்சையாக மட்டக்களப்பில் இடம்பெற்றது.


கிழக்குப் பல்கலைக்கழகம் - சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் 04.04.2026 திகதி இடம்பெற்ற சமூக செயற்பாட்டாளர்களையும், சமாதான நீதிவான்களையும் கெளரவிக்கும் நிகழ்வில் 200 இற்கு மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிற்குமான பிரதேச அபிவிருத்திக்குழுக்களுக்கான தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், 
ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோரும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.முரளீஸ்வரன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும், 


கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி, சிரேஸ்ட சட்டத்தரணி மயூரி தர்மதாஸ், மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


குறித்த நிகழ்விற்கு ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ், அருட்தந்தை சொலமன்ராஜ் அடிகளார், மௌலவி எஸ்.எச்.எம்.ரமீஸ் ஹாபீஸ் ஆகியோர் கலந்து கொண்டு ஆசியுரையினை நிகழ்த்தியதுடன், சமூகப் பணியாளர்களையும் கௌரவித்திருந்தனர்.


சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு  மலர்மாலை அணிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆன்மீக அதிதிகள்,  பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகள் மற்றும் அழைப்பு அதிதிகள் என அனைவருக்கும் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் தமிழ் மொழி வாழ்த்துப்பா இசைக்கப்பட்டு, உயிர் நீத்த சமாதான நீதிவான்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, 


அமைப்பின் கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு உறுதியுரை திகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந்து பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் சமூகப் பணியாளர்களை கெளரவித்து  வழங்கப்பட்ட "சமூக ஜோதி" மற்றும் "தேசிய ஜோதி" விருதுகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.


மாணவர்களின் அழகிய கண்கவர் நடனங்கள் அரங்கை அலங்கரித்ததுடன், சங்கத்தின் செயற்பாடுகளை கௌரவித்து கவிதை ஒன்று வாசிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூகமேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் இணைப்பாளர்களினால் அமைப்பின் தலைவர் "தேசிய ஜோதி, சாமஸ்ரீ தேசமானிய" உ.உதயகாந்த் சிறந்த தலைமைத்துவம் எனும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.




இந்நிகழ்வின் போது கலந்து சிறப்பித்த அனைத்து அதிதிகளின் தன்னலமற்ற சமூக சேவையினை பாராட்டி அமைப்பினால் உயரிய கௌரவம் அளிக்கப்பட்டதுடன் குறிந்த நிகழ்வின் போது சங்கத்தின் செயற்பாட்டிற்காக செயற்பட்ட  அமைப்பின் நிர்வாக சபை உறுப்பினர்களும் அமைப்பின் பிரதான இணைப்பாளர்கள் உள்ளிட்டோர் விசேட விதமாக கௌரவிக்கப்பட்டனர்.


குறித்த நிகழ்வானது திறம்பட நடாத்தி முடிப்பதற்கு அமைப்பின்  செயலாளர் "தேசகீர்த்தி, சமூகஜோதி" ரீ.லெட்சுமிகாந்தன் (JP), உபதலைவர் "தேசகீர்த்தி, சமூகஜோதி" ஜனாப்.எம்.வை.ஆதம், பொருளாளர் ஆயுள்வேத வைத்தியர் "தேசகீர்த்தி, சமூகஜோதி" Dr.சபாரெத்தினம் சுதர்சன், உபசெயலாளர்  கலாநிதி அருணாசலம் செல்வேந்திரன், நிருவாக சபை உறுப்பினர்களான ரீ.தயானந்தம் (JP), அகமட் சின்னலெவ்வை (JP), என்.நவதாசன் (JP), திருமதி.கிரிஷாந்தி தவப்பிரகாஷ் (JP), எம்.பகீரதன் (JP), கே.தவராசா (JP), கே.நடேசன் (JP), எம்.எஸ்.எம்.நசீர் (JP), கே.தங்கராசா (JP), ஈ.சீதாராமன் (JP), எம்.எஸ்.அகமட் லெவ்வை (JP),  திருமதி.இ.கோமலேஸ்வரி (JP),கே.சதீஸ்க்குமார் (JP), கணக்காய்வாளரான ஏ.தவராஜா (JP), மட்டக்களப்பு மாவட்ட பிரதான இணைப்பாளரும் நிகழ்விற்கான நிதி அனுசரனையினை பெற்றுத்தந்தவருமான மகேஸ்பரம் கோபிநாத் (JP) மற்றம்  மூன்று தொகுதிகளுக்குமான  இணைப்பாளர்களான  வீ.றமேஸ் 
ஆனந்தன்(JP),   Eng,தயாளசீலன் மயூரன் (JP), இன்பநாயகம் ரகுபரன் (JP), எம்.ஐ.எம்.ஹரீஸ் உள்ளிட்ட அமைப்பின் இணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் என பெருமளவானோர் உதவி ஒத்தாசைகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


















































மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் அர்ப்பணிப்பு மிக்க சமூகப் பணியாளர்களுக்கு கௌரவம்!! Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 06, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.