காத்தான்குடியைச் சேர்ந்த உவைஸ் முஹைதீனின் இரண்டாவது வனவிலங்கு ஒளிப்படக் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு
காத்தான்குடியைச் சேர்ந்த உவைஸ் முஹைதீனின் இரண்டாவது வனவிலங்கு ஒளிப்படக் கண்காட்சி இன்று (02) வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
இன்று முதல் 05ந் திகதி வரை இக் கண் காட்சி இடம் பெறவுள்ளது.
இலங்கைச் சுங்கத்தில் பணியாற்றும் சுங்க அத்தியட்சகரான உவைஸ் முஹைதீன், வனவாழ் உயிரினங்களை ஒளிப்படம் எடுப்பதிலும் வனப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த செயற்பாடுகளிலும் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றார்.
இக் கண்காட்சியில் இலங்கையின் தேசிய வனங்களிலும் கென்யாவின் மசாய் மாரா தேசிய வனத்திலும் எடுக்கப்பட்ட 30 ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் ஒளிப்படக்கலை (Photography) தொடர்பான துறைசார் வல்லுனர்களினால் செயலமர்வுகளும் படுத்தப்படுகின்றன
இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி றினோசா முப்லி முன்னாள் சவூதி அரேபியா தூதுவர் அம்சா
சுற்றாடல் அமைச்சின் இணைப்பாளரும் காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரின் இணைப்பாளருமன அஷ்ஷெய்க் பிர்தெளஸ் நழீமி . உட்பட பலரும் கலந்து கொண்டனர்
எம் எஸ் எம் நூர்தீன்
02.04.2026
காத்தான்குடியைச் சேர்ந்த உவைஸ் முஹைதீனின் இரண்டாவது வனவிலங்கு ஒளிப்படக் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 02, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 02, 2026
Rating:






















கருத்துகள் இல்லை: