500 ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் வகையில் மேட்டு நில மைய்யவாடியை நிர்மாணித்து கொடுத்த காத்தான்குடியைச் சேர்ந்த இளம் வர்த்தகர்.
காத்தான்குடி
வர்த்தகர்கள், தனவந்தர்கள், வசதி படைத்தவர்கள் என பலரும் அவர்களின் சகாத், சதகா என்பவற்றை வழங்கி வசதி குறைந்தோர் வறுமையானவர்கள் போன்றோருக்கு உதவி வருவதோடு அவர்களின் வாழ்வில் ஒளியூட்டியும் வருகின்றனர்.
நமதூரில் உள்ள ஒரு இளம் பிரபல்யமான வர்த்தகர் வீடற்ற 22வயதுக்கு மேற்பட்ட குமாரும் பிள்ளைகளுக்கு நிரந்தர வீடுகளை சுமார் 25 இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான வீடுகளை வருடாந்தம் 50க்கு மேல் நிர்மாணித்து கொடுத்து வருகிறார்.
அதே போல் இன்னுமொரு இளம் வர்த்தகர் தனது பெயரை வெளிக்காட்ட விரும்பாத ஒரு வர்த்தகர் இவ்வாறு வருடாந்தம் அவரின் சகாத் மற்றும் சதகா வேலைத் திட்டத்தில் பல சமூக வேலைத் திட்டங்களை மேற் கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தனது சதகா மூலம் காத்தான்குடி முகைதீன் மெதத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் மாரி காலத்தில் 500 ஜனாஸாக்களை அடக்கம் செய்யக் கூடிய மேட்டு நில மைய்யவாடியை சுமார் 70 இலட்சம் ரூபாவுக்கு மேல் செலவழித்து இந்த இளம் வர்த்தகர் நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்.
பள்ளி வாயல் நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த மேட்டு நில மைய்யவாடியை நிர்மாணித்து கொடுத்துள்ளார்.
இந்த மைய்யவாடியில் ஏற்கனவே இருக்கிற மேட்டு நில மைய்யவாடி பூரணமாகி உள்ள நிலையில் மேட்டு நில மைய்ய வாடியொன்று மிகவும் அவசியமான நிலையில் இந்த மேட்டு நில மைய்யவாடி அவசியமாகிறது.
இதன் நிர்மாணப் பணிகள் பூரணப் படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த வர்த்தகரின் நிறுவன ஊழியர்கள் மற்றும் ஜனாஸா நலன்புரி அமைப்பு உறுப்பினர்கள் பங்கு கொண்ட சிரமதானமும் நேற்று (03) வெள்ளிக்கிழமை காலை சிரமதானம் செய்யப்பட்டது
இப்படியான வர்த்தகர்கள் அனைவரின் வாழ்விலும் தொழிலிலும் அல்லாஹ் பறக்கத் ரஹ்மத் செய்வானாக
எம் எஸ் எம் நூர்தீன்
04.04.2026
500 ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் வகையில் மேட்டு நில மைய்யவாடியை நிர்மாணித்து கொடுத்த காத்தான்குடியைச் சேர்ந்த இளம் வர்த்தகர்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 04, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 04, 2026
Rating:







கருத்துகள் இல்லை: