Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பிரஜாசக்தி நிகழ்ச்சி - 2026 “தமக்கானதோர் இடம் அழகான வாழ்க்கை” முதற்கட்ட காசோலைகள் வழங்கி வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பிரஜாசக்தி  நிகழ்ச்சி - 2026 “தமக்கானதோர் இடம் அழகான வாழ்க்கை” எனும் அரசின் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர், அட்டாளைச்சேனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயனாளிகளுக்கான (10 இலட்சம் பெறுமதியான) வீடுகளுக்கான முதற்கட்ட  காசோலைகள் (150,000) வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில்  (03) நடைபெற்றது.



இந்நிகழ்வில் கரையோர பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.



அத்துடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ.அப்கார்,  கணக்காளர் எப்.எம்.பர்ஹான், அட்டாளைச்சேனை தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் தோழர் சத்தார், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப், பிரஜாசக்தியின் தவிசாளர்கள் மற்றும்  தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


பிரஜாசக்தி நிகழ்ச்சி - 2026 “தமக்கானதோர் இடம் அழகான வாழ்க்கை” முதற்கட்ட காசோலைகள் வழங்கி வைப்பு Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 05, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.