முகக்கவசம் அணிய மறுக்கும் Trump
வெள்ளை மாளிகை ஊழியர்கள் இருக்கையில் அமரும் நேரத்தை தவிர மற்ற எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணியும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.
அமெரிக்கா துணை அதிபர் மைக் பென்ஸின் உதவியாளர்கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்தை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது அமெரிக்க.
ஆனால், ரோஸ் கார்டனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், முகக்கவசம் அணியாமலே பத்திரிகை யாளர்களை சந்தித்தார் டொனால் டிரம்ப்.
அவர்,“நான் அனை வரிடமிருந்தும் விலகியே இருப்பதால் முகக்கவசம் அணிய தேவையில்லை,” என்றார்.
அதுமட்டுமல்லாமல், வெள்ளை மாளிகையில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று குறித்தும் மிக சாதாரண மாகவே பேசினார்.
அவர், “நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளை மாளிகைக்கு வருகிறார்கள், செல்கிறார்கள்,” என்றார்.
மேலும்
அவர், “கொரோனாவை கட்டுப்படுத்த நாம் சிறப்பாகவே செயல் படுகிறோம்,” என்று கூறினார்.
அவர், “ஒருவருக்குதான் கொரோனா. அவருடன் தொடர்பில் இருந்த வர்களுக்கெல்லாம் நெகடிவ்ரிப்போர்ட் வந்துள்ளது,” என தெரிவித்தார்.
முகக்கவசம் அணிய மறுக்கும் Trump
Reviewed by www.lankanvoice.lk
on
மே 12, 2020
Rating:

கருத்துகள் இல்லை: