இன்று சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15 மணியளவில்

அதிகாலை 2.34 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு இடமபெறும் என்றும் அவர் கூறினார்.
சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.
இலங்கை நேரப்படி இன்று இரவு 11.15 மணி முதல் நாளை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும்.
வானிலையில் எந்த மாற்றமின்றி தெளிவாக இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் இதனை முழுமையாக காண முடியும்.
அறிவியலின் படி சந்திர கிரகணம் என்பது எந்த பாதிப்புமற்ற பாதுகாப்பான ஒன்று. எனவே சந்திர கிரகணத்தை பார்க்க எந்த முன்னெச்சரிக்கை மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் ஏதும் தேவையில்லை.sor.ne
இன்று சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15 மணியளவில்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 05, 2020
Rating:

கருத்துகள் இல்லை: