ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணை அறிக்கையை ஶ்ரீசுக நிராகரிப்பு
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிக்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழுவின் யோசனையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி ஊடாக ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட அதிகாரம் சில சந்தர்ப்பங்களில் அத்துமீறி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது.
br/lnw
ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணை அறிக்கையை ஶ்ரீசுக நிராகரிப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 26, 2021
Rating:

கருத்துகள் இல்லை: