காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பாரிய நோய் நிவாரன நிதியம் விடுக்கும் முக்கியமான அறிவித்தல்
அன்புப் பொதுமக்களுக்கு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பாரிய நோய் நிவாரன நிதியம் விடுக்கும் முக்கியமான அறிவித்தல்.
அன்புடையீர்,
السلام عليكم ورحمة الله و بركاته
எமது ஊரில் தொற்றா நோய்கள் மற்றும் பாரிய நோய்களினால் பீடிக்கப்பட்டு தமக்கான உரிய வைத்திய சிகிச்சையை பெறுவதற்கு போதியளவு பொருளாதாதார வசதி இன்றி துயரப்படும் பல சகோதர சகோதரிகள் அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் யாவற்றையும் நாம் அறிவோம்.
இத்தகைய சகோதர சகோதரிகளுக்கு எம்மாலான பங்களிப்பும் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் துயருற்ற மக்களுக்கு அவர்களுடைய துன்பங்களை துடைப்பதற்காக முயற்சி செய்வது ஒரு சமூகக் கடமை என்ற அடிப்படையிலும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பாரிய நோய் நிவாரண நிதியமானது எமது பகுதியில் பல்வேறு முயற்ச்சிகளை கடந்த பல வருடங்களாக முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் யார் ஒரு ஆத்மாவை வாழவைக்கின்றாரோ அவர் முழு மனித சமூகத்தையும் வாழ வைத்தவர் போலாவார் என்ற திருமறை வசனத்தை எமது அன்றாட வாழ்வில் பயிற்றுவிக்கும் முகமாகவும் மேற்குறித்த நிதியத்தின் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக அமையும் வகையிலும் பிரதி வெள்ளிக் கிழமை தோறும் ஜும்ஆவுடைய தினத்தில் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பாரிய நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ள சகோதர சகோதரிகளுக்கு உதவும் முகமாக நிதி சேகரிக்கப்பட்டு வருவதை பொது மக்களாகிய தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
எனவே, நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்காக வருகை தருபவர்கள் தங்களால் முடியுமான நிதிப்பங்களிப்பினை கொண்டுவந்து வழங்குமாறும், வீட்டிலுள்ள பெண்கள், தாய்மார்கள் ஜும்ஆவுக்கு வருகைதரும் ஆண்களிடம் மேற்படி நிதிப்பங்களிப்புகளை கொடுத்தனுப்புமாறும் தயவாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
'அல்லாஹ் எம்மனைவரது தூய பணிகளையும் ஏற்று, எம்மனைவருக்கும் சிறந்த ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக' ஆமீன்.
இவ்வண்ணம்.
தலைவர்,செயலாளர்
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின்; சம்மேளனம்
காத்தான்குடி.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பாரிய நோய் நிவாரன நிதியம் விடுக்கும் முக்கியமான அறிவித்தல்
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 25, 2021
Rating:

கருத்துகள் இல்லை: