மீண்டும் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமனம்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் நியமிக்க, கட்சியின் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக தயாசிறி ஜயசேகரவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு, கட்சித் தலைமையகத்தில் நேற்று கூடியது.
இந்த கூட்டத்திலேயே அவர்களை தலைவர் மற்றும் செயலாளராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(T/mirror)
மீண்டும் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமனம்
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 26, 2021
Rating:

கருத்துகள் இல்லை: