Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யாமல்: சிறப்பாக நடைபெற்றது ஷம்ஸ் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் தெரிவு-2021

றாசிக் நபாயிஸ், மருதமுனை)

கடந்த காலங்களில் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் மாத்திரமே கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் இதிலுல்ல குறைகளை கண்டறிந்த பழைய மாணவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் அது தொடர்பாக வெளியிட்ட பதிவுகளால் துரித மாற்றத்துக்கு வந்தது அனைத்து பழைய மாணவர்களும் பொதுக் கூட்டத்திலும் நிர்வாகத் தெரிவிலும் கலந்து கொள்ள பொன்னான வாய்ப்பு.


இது தொடர்பாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கத் தெரிவு தொடர்பாக தெளிவுகள் பெறும் நோக்கில் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், கணக்காய்வுத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டு, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட குறித்த சங்கம் தொடர்பான நிதிப்பிரமாணங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் என்பவற்றின் அடிப்படையில் பாடசாலையின் கல்வி கற்ற பழைய மாணவர்கள் அனைவரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள தகைமையுடையவர்கள் 
எனும் அடிப்படையில் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.சக்காப் தலைமையில் வி.எம்.ஐ.சி.எச்.மண்டபத்தில் சென்ற  (27) மாலை சிறப்பாக நடைபெற்றது.


மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும்.

அதனடிப்படையில் கலந்து கொண்ட பழைய மாணவர்கள் பலர் நிர்வாகத் தெரிவுக்கு போட்டித்தன்மையின்றி
தெரிவு செய்யப்பட்டார்கள்.


பாடசாலையின் அதிபர் ஏ.எல்.சக்காப் SLPS-1 பதவி வழியில் பழைய மாணவர் சார்பாக தலைவராகவும்
செயலாளராக
சுகையில் ஜமால்டீன்,
உப செயலாளராக
ஏ.எம்.எம்.றியாஜத்,
உப தலைவராக
எம்.பி.சர்மில் ஜஹான்,
பொருளாளராக
பி.எம்.அரபாத்,
கணக்காய்வாளராக
எம்.எம்.ஏ.சுபாயிர் போன்றோருடன்
உறுப்பினர்களாக
ஏ.ஆர்.எம்.சுல்பி,
ஏ.எம்.திலிப் நெளஷாத்,
எம்.எம்.ஹிஷாம்,
எம்.ஏ.யாஸிர் றஸ்மி,
ஏ.எல்.எம்.ஷினாஸ்,
ஏ.டபியூ.றியாஸ்.
எம்.ஏ.முபீத்,
எம்.எம்.சப்னாஸ்
எம்.எல்.கே.எம்.ஜரீத்
ஏ.டபியூ.அஸீம்,
எம்.ரி.எம்.அன்பஸ்,
எம்.எம்.ஏ.அஸாம் மற்றும்
எம்.எஸ்.எம்.தானிஸ் போன்றோர்கள்
ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

இதன் போது பாடசாலையின் அதிபர் தனது தலைமையுரையில் இப்பாடசாலை 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது முற்றாக பாதிக்கப்பட்டு பல சிரமங்களுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் இருந்த வேளையில் பாடசாலை மீள் உருவாக்கத்திலும் பாடசாலை அபிவிருத்தியிலும் அதிகமான அக்கரையும் உத்வேகமும் கொண்டு இதனை மீண்டும் புதிய  இடத்தில் உருவாக்க வேண்டும் என்று முழுக்க முழுக்க தங்களை தியாகம் செய்தவர்கள் இந்த பழைய மாணவர்களும், 
கல்வியாளர்களும், நலன்பிரும்பிகளும் என்பதை இந்த இடத்தில் நினைவு கூற விரும்புகிறேன் என்றார்.

அதனடிப்படையில் இன்று இப்பாடசாலை தனித்துவமாக புதிய இடத்தில் 1,100 மாணவர்களுடன் கல்வி, கலை, கலாசார, விளையாட்டு மற்றும் இடைப்பாட விதான செயற்பாடுகளிலும்
மிகவும் கம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்கின்றது. இருந்தும் இன்னுன் அதிகமான வெற்றிப்பாதைக்கும் வளர்ச்சிப் பாதைக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் இந்த பாடசாலையின் கற்றல், கற்பித்தல் மற்றும் பெளதீக வளங்களில் பங்களிப்பு வழங்குவதுடன் முழுக்க முழுக்க தியாக உணர்வுடன் செயற்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.



விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யாமல்: சிறப்பாக நடைபெற்றது ஷம்ஸ் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் தெரிவு-2021 Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 31, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.