ஐ.தே.கவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயார் – சஜித் அணி அறிவிப்பு
மாகாணசபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சியான எமது கட்சி தயாராகவே உள்ளது. மக்கள் தீர்ப்புமூலம் எமது பலத்தை நிரூபிப்போம் –என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
மாகாணசபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு சட்டத்தில் சிறு மாற்றத்தையே செய்யவேண்டும். அதனை விரைவில்செய்து தேர்தலை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தலை சந்திக்க நாம் தயார். அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அரசுமீது மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். எமது அணி பலமாக உள்ளது. எனவே, தேர்தலை வைத்தால் இது தெளிவாக தெரியும்.
ஊழல் , மோசடி அற்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு தேர்தல் எதிர்கொள்வதற்கும் நாம் தயார்.” – என்றார்.sor/kuru

கருத்துகள் இல்லை: