Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பெசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.


பெசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

பெசில் ராஜபக்ஷ இன்று (08.07.2021 வியாழன்) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நிதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அமைச்சரவைப் பொறுப்புகளில் மேற் கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட அவர்கள் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ அவர்களின் பெயர், கட்சியின் தலைமைச் செயலாளர் சாகர காரியவசம் அவர்களினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் Tஅறிவிக்கப் பட்டிருந்தது. 

அந்த வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) பெசில் ராஜபக்ஷ அவர்களைப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்துள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது. 

பெசில் ராஜபக்ஷ அவர்கள், 2007ஆம் ஆண்டு தேசிய பட்டியல் மூலம் முதன் முறையாகப் பாராளு மன்றத்துக்குப் பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட  பெசில் ராஜபக்ஷ அவர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்தார். 

கொவிட் நோய்த் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு செயற்பாடுகளுக்குத் தலைமை வகித்த பெசில் ராஜபக்ஷ அவர்கள், கொவிட் ஒழிப்புச் செயற்குழுவின் உறுப்பினராகவும் பெரும் பணியாற்றினார். 

பொருளாதாரப் புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதிச் செயலணி மற்றும் காலநிலை மாற்றத்துக்குப் பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகவும் பெசில் ராஜபக்ஷ அவர்கள், உள்ளார்.  

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புஷ்பா ராஜபக்ஷ ஆகியோர், இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

බැසිල් රාජපක්ෂ මහතා අද (08) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේ දී ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමා ඉදිරියේ නව මුදල් අමාත්‍යවරයා ලෙස දිවුරුම් දුන්නේය.

අමාත්‍යාංශ විෂය පථ සංශෝධනයත් සමග අග්‍රාමාත්‍ය මහින්ද රාජපක්ෂ මැතිතුමා ආර්ථික ප්‍රතිපත්ති හා සැලසුම් ක්‍රියාත්මක කිරීමේ අමාත්‍යවරයා ලෙස දිවුරුම් දෙනු ලැබීය.
ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණේ පත් කළ මන්ත්‍රී, ජයන්ත කැටගොඩ මහතා ඉල්ලා අස්වීමෙන් පුරප්පාඩු වූ පාර්ලිමේන්තු මන්ත්‍රී ධුරය සඳහා ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණේ ජාතික සංවිධායක, බැසිල් රාජපක්ෂ මහතාගේ නම පක්ෂයේ ප්‍රධාන ලේකම් සාගර කාරියවසම් මහතා විසින් මැතිවරණ කොමිසමට ලිඛිතව දැනුම් දෙනු ලැබිණ.

ඒ අනුව මැතිවරණ කොමිසම ඊයේ (07), බැසිල් රාජපක්ෂ මහතා පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයෙකු ලෙස තෝරා පත්කරගත් බව ගැසට් නිවේදනයක් මගින් ප්‍රකාශයට පත් කළේය.

2007 වසරේ ජාතික ලැයිස්තුවෙන් පත් කළ මන්ත්‍රීවරයෙකු ලෙස බැසිල් රාජපක්ෂ මහතා පළමු වරට පාර්ලිමේන්තුවට පිවිසියේය. අනතුරුව 2010 වසරේ පැවති මහ මැතිවරණයේ දී තරග වැද පාර්ලිමේන්තුවට පිවිසි බැසිල් රාජපක්ෂ මහතා ආර්ථික සංවර්ධන අමාත්‍ය ධුරය හෙබවීය. 

කොවිඩ් වසංගතය හමුවේ රජය ගෙන යන ක්‍රියාකාරකම් රැසකට මූලිකත්වය දුන් බැසිල් රාජපක්ෂ මහතා කොවිඩ් මර්දන කමිටුවේ සාමාජිකයෙකු ලෙස විශාල මෙහෙවරක් ඉටු කළේය. “ආර්ථික පුනර්ජීවනය හා දරිද්‍රතාවය තුරන් කිරීම පිළිබඳ ජනාධිපති කාර්ය සාධක බලකායේ” සහ “දේශගුණික විපර්යාසයන්ට තිරසර විසඳුම් සහිත හරිත ශ්‍රී ලංකාවක් ඇති කිරීමේ ජනාධිපති කාර්ය සාධක බලකායේ” ප්‍රධානී ලෙස ද  බැසිල් මහතා කටයුතු කරයි.
අමාත්‍ය නාමල් රාජපක්ෂ, ජනාධිපති ලේකම් පී.බී. ජයසුන්දර, ජනාධිපති ප්‍රධාන උපදේශක ලලිත් වීරතුංග, අග්‍රාමාත්‍ය ලේකම් ගාමිණී සෙනරත්, පුෂ්පා රාජපක්ෂ යන මහත්ම මහත්මීහූ මේ අවස්ථාවට එක්ව සිටියහ.

Mr Basil Rajapaksa took his oaths as Minister of Finance before President Gotabaya Rajapaksa at the Presidential Secretariat today (July 08). 

With the reshuffle of ministerial portfolios, Prime Minister Mahinda Rajapaksa was sworn-in as Minister of Economic Policies and Planning.

With the resignation of National List Member of Parliament Jayantha Ketagoda, Sri Lanka Podujana Peramuna General Secretary Sagara Kariyawasam submitted Mr Basil Rajapaksa’s name to the Elections Commission to fill the vacancy. Accordingly, the Elections Commission issued the gazette to notify appointment of Mr Basil Rajapaksa as an MP yesterday.

In 2007 Mr Basil Rajapaksa joined the parliament for the first time as a National List Member. In 2010, he contested and got elected as an MP representing the Sri Lanka Freedom Party and was appointed Minister of Economic Development.

Mr. Basil Rajapaksa spearheaded a number of government initiatives in the wake of the Covid-19 pandemic and played a major role as a member of the Committee to Combat COVID 19. He is also the Head of the Presidential Task Force on Economic Revival and Poverty Alleviation and the Presidential Task Force on Creating a Green Sri Lanka with Sustainable Solutions to Climate Change.

Minister Namal Rajapaksa, Secretary to the President, P B Jayasundara, Senior Advisor, Lalith Weeratunga, Secretary to the Prime Minister, Gamini Senarath and Mrs Pushpa Rajapaksa were also present during the swearing-in ceremony.

GotabayaRajapaksa #GR grdigital #cabinet #BR ParliamentofSriLanka
பெசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 08, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.