புதிய வெளிவிவகார அமைச்சர் – இந்திய தூதுவர் சந்திப்பு
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பீரிஸ் இன்று தமது கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்றார்.
அதன்பின்னரே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
புதிய வெளிவிவகார அமைச்சருக்கு வாழ்த்துகளை தெரிவித்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர், இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.
புதிய வெளிவிவகார அமைச்சர் – இந்திய தூதுவர் சந்திப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 18, 2021
Rating:
கருத்துகள் இல்லை: