Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியினைப் பெறாது பதுங்கி இருப்போர் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.


நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியினை இதுவரை பெற்றுக்கொள்ளாது பதுங்கி இருப்போர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்..  

கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்  அதிஉட்ச  நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி ஏற்றல் விடயத்துக்கு    பலரும் பாராட்டுக்களை  தெரிவித்து வருகின்ற நிலையில்   நாட்டில் சிலர் கவலையீனமாக இருந்து வருகின்றனர். அதற்கான  காரணமாக  சில விடயங்களை குறிப்பிடலாம்.
 
1) தடுப்பூசி தொடர்பில் அவர்களுக்கு இருக்கின்ற வீண் அச்சம். 

2) வதந்திகளை நம்புதல், 

3) தங்களது கவலையீனம்.

4)பொடுபோக்கு போன்ற  காரணங்களால் தடுப்பூசியினைப் பெற்றுக் கொள்ளாதுள்ளனர். 
இன்று நாடுபூராகவும்  அரசினால் இலவசமாக வழங்கப்பட்டு வரும்  கொரோனா  தடுப்பூசியின் முதலாவது  டோஸைக்கூட இதுவரை  செலுத்திக் கொள்ளாதபலர்  மட்டக்களப்பு மாவட்டத்தின் பல  பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்   உள்ளனர் என்பதனை நாங்கள் மேற்கொண்ட Investigation Media Report மூலம் அறிய முடிகின்றது. 

எனவேதான் இவ்வாறானவர்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்..

கடந்த சில நாட்களாக கொழும்பு நகரத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொவிட் தடுப்பூசியின் ஒரு டோஸைக்கூட செலுத்திக் கொள்ளாதவர்களைத் தேடி விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதனைப் போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் இது தொடர்பில் அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  

ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியினைப் பெறாது பதுங்கி இருப்போர் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும். Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 10, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.