டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு, அமெரிக்கா முதலிடம், அடுத்த ஒலிம்பிக் பிரான்ஸில்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 16 நாட்களாக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 11,326 வீரர்கள் பங்கேற்ற இந்த ஒலிம்பிக்கில், 33 விளையாட்டில் 339 போட்டிகள் நடைபெற்றன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் இ (ஆகஸ்ட்.,8) நிறைவடைந்தது.
இறுதிநாளில் 3 தங்கப்பதக்கங்களை வென்ற அமெரிக்கா, சீனாவை பின்னுக்கு தள்ளி, பதக்கப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
39 தங்கத்துடன் அமெரிக்கா (மொத்தம் 113 பதக்கங்கள்) முதலிடத்திலும், 38 தங்கத்துடன் சீனா (மொத்தம் 88 பதக்கங்கள்) இரண்டாமிடத்திலும், 27 தங்கத்துடன் ஜப்பான் (மொத்தம் 58 பதக்கங்கள்) மூன்றாமிடத்திலும் உள்ளன.
2024 ஒலிம்பிக், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது.
பிரிட்டிஷ் அணி - 22, ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி - 20, ஆஸ்திரேலியா - 17, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி தலா - 10, கனடா, பிரேசில் தலா - 7 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளன.

கருத்துகள் இல்லை: