சால்வைகளுடன் திருகோணமலை மக்களை ஏமாற்ற நாளைய தக்பீர் கோஷத்துடன் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் இம்ரான் எம்.பி
புதன்கிழமை காலை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
முஸ்லிம் கட்சி தலைவர்கள் அனுமதியுடனே அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது முஸ்லிம் காங்கிரசின் புதிய தேசிய அமைப்பாளர் நியமனம் நியமனம் மூலம் உறுதியாகிறது.
இருபதாம் திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக முஸ்லிம் கட்சி தலைவரை தவிர பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கும்போது இது எமக்கு தெரியாமல் வாக்களித்து விட்டார்கள் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என பல கதைகள் கூறும்போதே நாம் கூறினோம்.
இது தலைவரின் அனுமதியுடனேயே நடைபெற்றுள்ளது. ஹக்கீம் நாடகமாடுகிறார் என இப்போது நாம் சொன்னது உண்மையாகியுள்ளது.
கடந்தவாரம் சால்வைகளுடன் திருகோணமலை மக்களை ஏமாற்ற நாளைய தக்பீர் கோஷத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் தலைமையில் ஒரு நடைபெற்ற நிகழ்வில் இருபதுக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஹக்கீம் அறிவித்தார்.
இதுதான் இருபதுக்கு வாக்களித்தவர்களுக்கு எடுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை. நீங்கள் உங்கள் கட்சியில் யாரைவேண்டுமானாலும் என்ன பதவிக்கு வேண்டுமானாலும் நியமியுங்கள். அதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எதற்கு இந்த நாடகம். ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள். அரசாங்கத்துடன் இணைவதானால் நேரடியாக மக்களிடம் கூறி இணையலாமே.எதற்காக இத்தனை பொய்கள் இத்தனை நாடகங்கள்
தேர்தல்காலத்தில் குரான் ஹதீஸ்களை கூறி மக்களிடம் வாக்கு கூறும் நீங்கள் ஏன் இத்தனை பொய்களையும் நாடகங்களையும் கூறி மக்களை ஏமாற்றுகிறீர்கள்.இதுதான் உங்களின் குரான் ஹதீஸா?
இஸ்லாத்தின் பெயரை கூறி எத்தனை காலம் மக்களை ஏமாற்றப்போகிறீர்கள்.
இன்று இந்த அரசாங்கம் முஸ்லிம் விரோத போக்குடன் செயற்படுகிறது என்றால் அதற்கு இந்த முஸ்லிம் கட்சிகளின் இவ்வாறான செயற்பாடுகளே காரணம். அன்று மஹிந்த ராஜபக்சவிடம் அனைத்து சலுகைகளையும் அனுபவித்த பின்னர் அவரை கைவிட்டு தபால் வாக்களிப்பு முடிந்தபின்னர் மைத்திரியிடம் ஓடிவந்தீர்கள். அதில் ஒருவர் விசேடமாக தேசிய பட்டியல் உறுப்பினரை பெற்றவுடன் சூட்டோடு சூடாக ஓடிவந்தார்
இவ்வாறு காலம் காலமாக நீங்கள் செய்யும் துரோகங்களே இன்று முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு காரணம். இன்றும் அதேபோல் மீண்டும் ராஜபக்சக்களின் காலில் விழுந்துவிட்டீர்கள்.ஆனால் நீங்கள் அன்று ராஜபக்ஸாக்களுக்கு செய்த துரோகத்தால் அவர்கள் ஹக்கீமையும் றிசாத்தையும் சேர்க்கவில்லை.
.
சால்வைகளுடன் திருகோணமலை மக்களை ஏமாற்ற நாளைய தக்பீர் கோஷத்துடன் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் இம்ரான் எம்.பி
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 11, 2021
Rating:

கருத்துகள் இல்லை: