கைவிடப்பட்டுள்ள பாலமுனை பிரதான வீதியின் அபிவிருத்திப் பணிகள் விரைவில் பிரதேச சபை உறுப்பினர் சியாத்
வீதியானது காபட் வீதியாக செப்பனிடும் பணிகள் கடந்த
(2020.12.18) திகதி I project திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சில தினங்களில் வேலைகள் வேகமாக இடம்பெற்ற போதிலும் குறித்த வீதியானது இதுவரையில் பூர்த்தி செய்யப்படாமல் சுமார் 8 மாத காலமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் கவலையினை தெரிவிக்கின்றனர்.
கைவிடப்பட்டுள்ள குறித்த வீதி தொடர்பாக பொது மக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் MAM.சியாத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதனை அடுத்து
மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் MAM.சியாத் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA)
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்
Mr.Mayooran உடனான சந்திப்பு ஒன்றினை சென்ற (10.08.2021 வெள்ளி)
மேற் கொண்டிருந்தார்.
இதன் போது கைவிடப்பட்டிருக்கும் குறித்த வீதி தொடர்பில் விடயங்களை கலந்துரை யாடியதற்கமைய குறித்த வீதியின் மிகுதி வேலைகள் யாவும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் செய்து முடிக்கப்படுமென குறித்த விடயங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர் Mr.Mayooran.Eng தன்னிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக நல்லாட்ச்சிக்கான தேசிய முன்னனியின்
மண்முனைப்பற்று பிரதேசபை உறுப்பினர் MAM.சியாத் லங்கன் வொய்ஸ் மீடியாவிடம் தெரிவித்தார்.
கைவிடப்பட்டுள்ள பாலமுனை பிரதான வீதியின் அபிவிருத்திப் பணிகள் விரைவில் பிரதேச சபை உறுப்பினர் சியாத்
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 12, 2021
Rating:

கருத்துகள் இல்லை: