COVID-19 கொரோனா வைரஸின் திடீர் எழுச்சியின் போது கர்ப்பிணிப் பெண்களுக்கான அறிவுறைகள்..
மருத்துவ சேவைகளுக்காக நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்கள் குடும்ப சுகாதார சேவை அதிகாரி அல்லது உங்கள் உடல்நிலை குறித்த மருத்துவ அதிகாரிக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்
நீங்கள் 8 மாதங்கள் (32 வாரங்கள்) அதற்கு மேற்பட்டதான கர்ப்பிணியாக இருந்தால் உங்கள் குடும்ப சுகாதார சேவை அதிகாரியை தொடர்பு கொண்டு மருத்துவரை சந்திக்கவும்
நீங்கள் 8 மாதங்களுக்கு (32 வாரங்களுக்கு) குறைவான கர்ப்பிணியாக இருந்தால்உங்களுக்கு கீழேக்குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இருப்பின் உங்கள் குடும்ப சுகாதார சேவை அதிகாரியை தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டு உங்கள் தற்போதைய சுகாதார நிலைமை குறித்து அவர்களுக்கு அறிவித்து மருத்துவரை சந்திக்கவும்.
- நீரிழிவு நோய்
- உயர் இரத்த அழுத்தம்
- இதய நோய்கள்
- ශசுவாச பிரச்சினைகள்
- வேறு ஏதேனும் அறிகுறிகள் அல்லது சிரமங்கள்
முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும். உ.ம். நிகழ்வுகள், பயணங்கள், பொருள் கொள்வனவு போன்றவை.
மேலதிக தகவல்களுக்கு, 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கம் 1999 யை தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் குடும்ப சுகாதார சேவை அதிகாரியை தொடர்பு கொள்ளவும்.
COVID-19 கொரோனா வைரஸின் திடீர் எழுச்சியின் போது கர்ப்பிணிப் பெண்களுக்கான அறிவுறைகள்..
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 31, 2021
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 31, 2021
Rating:

கருத்துகள் இல்லை: