அரசியலில் சில விடயங்கள் மக்களை ஏமாற்றும் தொடர் நாடகங்கள்.
அரசியலில் சில விடயங்கள் மக்களை ஏமாற்றும் தொடர் நாடகங்கள் என உலமா கடசியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..........
இம்முறை பட்ஜட்டை ஆதரித்தமைக்காக 3 எம் பீக்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கினாலும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தாலும் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க முடியாது.
2003ம் ஆண்டு ரிசாத் பதியுதீனும் இன்னும் சிலரும் இப்படித்தான் ஹக்கீமிடமிருந்து விலகி அரசில் செய்தனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஷ் தலைவர் ரஊப் ஹக்கீம் இவர்களின் எம்.பி பதவியை பறிக்க எவ்வளவோ குதித்து பார்த்தார் முடியவில்லை.
அப்போது அரசில் சேர்ந்த புத்தளம் பாயிஸ் பின்னர் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கடசியில் இணைந்தார்.
ஆகவே இதுவெல்லாம் மக்களை ஏமாற்றும் தொடர் நாடகங்கள்.
பொது தேர்தல் வரும் போது பெரும்பாலானோர் அதே கட்சிகளில் வலம் வருவர். இப்போது அவர்களை ஏசுபவன் அப்போது பல் இளித்து நிற்பான்.
இதுவெல்லாம் மக்களை ஏமாற்றும் தொடர் நாடகங்கள்.
அரசியலில் சில விடயங்கள் மக்களை ஏமாற்றும் தொடர் நாடகங்கள்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 23, 2021
Rating:

கருத்துகள் இல்லை: