தேசிய உற்பத்தித் திறன் போட்டி - 2020 ல் காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயம் 3வது இடம்.
தேசிய ரீதியில் பாடசாலைகள் பங்கு பற்றும் தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் காத்தான்குடி மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயம் 3வது இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
தரமான கல்வியின் நிலைபெறுதகு தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பாடசாலைகள் பிரிவின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் இப்போட்டியில் அகில இலங்கை ரீதியாக பாடசாலைகள் பங்கு பற்றி அவற்றில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் பாடசாலைகளுக்கு விசேட விருதுகளும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
உற்பத்தித் திறன் எண்ணக்கருவை பின்பற்றி அதிக பயனைப் பெற்றுக்கொண்ட பாடசாலைகள், அரசதுறை மற்றும் உற்பத்திகள் மற்றும் சேவைகள் துறையினருக்கு இவ்விருதுகள் வழங்கப்படுவது சிறப்பம்சமாகும். இந்த வகையில் 2020ம் ஆண்டு நடைபெற்ற மேற்படி தேசிய உற்பத்தித் திறன் போட்டி - 2020 ல் காத்தான்குடி மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயமானது முதன் முறையாக போட்டியிட்டு அதில் 3 வது இடத்தைப்பெற்றிருப்பது மிகப்பெரும் சாதனையாகும்.
இம்முறை 2020ற்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயம் மாத்திரமே 3வது இடத்தைப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித்தொடர் ஊடாக உன்னதமான உற்பத்தித்திறன் செயலாற்றுகையைக்கொண்ட பாடசாலைகள் மதிப்பீட்டுக்கும் பாராட்டுக்கும் உள்ளாக்கப்படுகின்றன.
உற்பத்தித்திறன் எண்ணக்கருக்கள் நடைமுறைப் பாவனை மூலமாகப் பெற்றுக்கொண்ட வெற்றிகளை மதிப்பீடுசெய்கின்ற இந்த தேசிய பிரயத்தனத்தில் தைரியமாக ஆர்வத்துடன் போட்டியில் பங்கு பற்றி தேசிய ரீதியில் 3வது இடத்தைப்பெற்றுக்கொண்டமைக்காக காத்தான்குடி மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், அனைத்து மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன், குறிப்பாக எமது மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயமானது இப்போட்டியில் பங்கு பற்றி சிறப்பு விருது பெற்றும் முயற்சிக்கு தமது மேலான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும், மட்டக்களப்பு மத்தி வலய பணிமனை அலுவலர்கள் அனைவருக்கும், மற்றும் காத்தான்குடி கோட்ட கல்வி அதிகாரி அவர்களுக்கும், காத்தான்குடி கோட்ட கல்விப் பணிமனை அலுவலர்கள் அனைவருக்கும் எமது விசேட நன்றிகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
பாரிஸ் அமானுல்லாஹ்.
செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயம்
காத்தான்குடி - 02.
தேசிய உற்பத்தித் திறன் போட்டி - 2020 ல் காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயம் 3வது இடம்.
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 11, 2021
Rating:

கருத்துகள் இல்லை: