Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது.

தற்போது  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள காத்தான்குடி ஆதார  வைத்தியசாலை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தை மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாபிழ் நஸீர் அகமட்  இரண்டு தினங்களுக்கு முன்பு  கெளரவ பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து கோரிக்கையை முன்வைத்தார்.

இதன் போது மேற்படி வைத்தியசாலையை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ்  கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதம மந்திரி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூஎல்எம்என் முபீன் தெரிவித்தார்.

மேற்படி வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ்  கொண்டு வருவதன் அவசியம் தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூஎல்எம்என் முபீனும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகருமான டொக்டர் ஜாபிரும் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களை  ஏறாவூரில் கடந்த ஆறுமாதங்களுக்கு  முன்பாக சந்தித்து வலியுறுத்தி இருந்ததுடன் ஆவணங்களையும் கையளித்திருந்தனர்.

மிக நீண்டகாலமாக  இவ் வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வர பல்வேறு அரசியல்வாதிகள் முயன்றும் அது முடியாமல் போனது. இவ்விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகாக காத்தான்குடி மக்கள் சார்பாக முபீன் அவருக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவிப்பதாக  தெரிவித்ததுடன்

மத்திய அரசின் கீழ் மேற்படி வைத்தியசாலை கொண்டு வரப்படுவதன் காரணமாக ஆளணி மற்றும் அபிவிருத்தி விடயங்களில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக முபீன் மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 11, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.