பஸிலிடமிருந்து அதிகாரத்தை பறிக்க வேண்டும் – விமல்
” பஸில் ராஜபக்ச அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் ஒருபோதும் தான் அமரப்போவதில்லை. அவரிடமிருந்து அதிகாரத்தை பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
” அமைச்சு பதவி நீக்கப்பட்டதால் கவலை இல்லை. மக்களுக்கு வழங்கிய ஆணையே முக்கியம். இந்த நாட்டை தற்போதைய நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவே நெருக்கடிக்குள் தள்ளினார். நாட்டை ஆள்வது ஜனாதிபதியோ பிரதமரோ அல்ல. பஸில்தான். அசிங்கமான அந்த அமெரிக்கருக்கு எமது நாட்டு தலைவிதியை நிர்ணயிக்க இடமளிக்க முடியாது. அவரிடமிருந்து அதிகாரத்தை பறிக்க வேண்டும்.” என்றும் விமல் கூறினார்.
பஸிலிடமிருந்து அதிகாரத்தை பறிக்க வேண்டும் – விமல்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 09, 2022
Rating:
கருத்துகள் இல்லை: