ஷேன் வோர்னின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின!
தாய்லாந்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது உயிரிழந்த உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வோர்னின் மரணம் இயற்கையானது என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பிரேதப் பரிசோதனையின் முடிவுகளை ஷேன் வோர்னின் குடும்ப உறுப்பினர்களிடம் தெரியப்படுத்தியதாகவும், இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், ஷேன் வோர்னின் உடல் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்வதற்காக பாங்காக்கில் உள்ள தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பிரேத பரிசோதனையின் முடிவுகள் தாய்லாந்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் கடந்த 4ஆம் திகதி உயிரிழந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஷேன் வோர்னின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின!
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 10, 2022
Rating:
கருத்துகள் இல்லை: