Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பக்கவாதம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்ட நடிகர் அஜித்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

அதன்படி சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் பெரிய வசூல் சாதனை படைத்தது. இப்படம் தற்போதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் ஷூடிட்ங் விரைவில் தொடங்க இருக்கிறது.

நடிகர் அஜித் திரைப்படங்கள் மட்டுமின்றி கார் மற்றும் பைக்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம், அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படத்தில் ஏகப்பட்ட பைக் ஸ்டண்ட்ஸ் காட்சிகள் இருந்தது.

இதனிடையே அஜித்தின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நரேஷ் பத்மநாபன், நடிகர் அஜித்தின் உடல்நிலை குறித்து பல திடுக்கிடும் தகவல்களை பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.


“அஜித் வலிமையில் விழும் காட்சியை மக்கள் இப்போது தான் பார்த்திருக்கிறார்கள். ஆனால், நான்கைந்து முறை அவர் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் போது காயம் அடைந்துள்ளார். தனது திரைப்படங்கள் மூலம் ஒரு நேர்மறையான செய்தியை தெரிவிக்க விரும்பினார் அஜித். விழுந்தாலும் மீண்டும் எழலாம் என்பதே அந்தச் செய்தி. அவரின் முதுகெலும்பில் இரண்டு நிலையிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்திய கீழ் பக்கமான முதுகெலும்பில் இருந்து ஒரு எலும்பு அகற்றப்பட்டது. கீழ் முதுகில், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, கிட்டத்தட்ட பக்கவாதத்தால் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.

பக்கவாதம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்ட நடிகர் அஜித் Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 10, 2022 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.