‘பிரச்சினைகள் விரைவில் தீரும் – பிரதமர் பதவியில் நீடிப்பேன்’ – மனம் திறந்தார் மஹிந்த
”பிரதமர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் இல்லை. பதவிகாலம் முடிவும்வரை பதவியில் நீடிப்பேன்.” இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
”நாட்டில் பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசு செயற்பட்டு வருகிறது. அரசுமீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.
எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன். அடுத்த தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசு தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி.
தற்போதைய நெருக்கடிகளான பொருளாதாரம், மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் அரசு விரைவில் தீர்க்கும்.” – என்றார் பிரதமர் மஹிந்த.
‘பிரச்சினைகள் விரைவில் தீரும் – பிரதமர் பதவியில் நீடிப்பேன்’ – மனம் திறந்தார் மஹிந்த
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 29, 2022
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 29, 2022
Rating:

கருத்துகள் இல்லை: