குப்பை விவகாரம் சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்னிறுத்த காத்தான்குடி நகரசபை நடவடிக்கை மேற்கொள்ளுமா......
காத்தான்குடி செய்தி- வீதிகளில் குப்பைகளை வீசியெறியும் கலாசாரம் இல்லாதொழிக்கப்படல் வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்னிறுத்த காத்தான்குடி நகரசபை நடவடிக்கை மேற்கொள்ளுமா......குப்பைகளை வீதிகளில் வீசியெறிந்துவிட்டுச் செல்லும் மிகவும் படுமோசமான செயற்பாடுகள் நாட்டின் நாலா பாகங்களிலும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அவ்வாறனதொரு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட கர்பலா கிராமத்துக்குச் செல்லும் பிரதான வீதியிலேயே இவ்வானதொரு அசிங்கமான சம்பவம் நீண்டகாலமாக அரங்கேறி வருகின்றது.
காத்தான்குடி விக்டறி மைதானம் மற்றும் கர்பலா வோட்ட போட் காணிக்கு முன்னால் உள்ள வீதியில் இனம் தெரியாத பலர் குப்பைகளை தினமும் வீசி குறித்த பகுதியினை அசிங்கப்படுத்தி வருவதனை காணமுடிகின்றது இது விடயமாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மேற்படி வீதியினை பாடசாலை மாணவர்கள்,அரச உத்தியோகஸ்தர்கள்,பொது மக்கள்,பொலிசார் என பலரும் அதிகதிகம் பயன்படுத்தி வருகின்ற நிலையிலேயே இவ்வாறு குப்பைகள் வீசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க சட்ட விரோதமாக வீசப்படுகின்ற குப்பைகளை அகற்ற முயற்சி எடுக்கும் காத்தான்குடி நகரசபை அதனை தடுப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையினை இதுவரை மேற்கொண்டதாக காணமுடியவி்ல்லை. காரணம் சட்ட விரோதமாக குப்பைகளை வீசுபவர்களை எச்சரிக்கை செய்யக்கூடியதான எவ்விதமான காட்சிப்படுத்தலையும் நகரசபை செய்ததாக காணவில்லை. அல்லது நகர சபையினையினால் அவ்விடத்தினை முழுமையாக சுத்தம் செய்து மணல் இட்டுப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கவில்லை. இதுவிடயத்தில் காத்தான்குடி நகர சபை மேற்கொண்ட நடவடிக்கைதான் என்ன.....? என பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
காத்தான்குடி நகரசபை தவிசாளரே,
நகரசபை உறுப்பினர்களே,
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு...............
கவனமெடுங்கள்......களத்தில் இறங்குங்கள்.... அசிங்கமென்றை அழகாக்குங்கள்.




கருத்துகள் இல்லை: