‘இந்தியா வழங்கிய கடனால் பொருட்களுக்கு தட்டுப்பாடின்றி புத்தாண்டை கொண்டாடலாம்’
” மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு இந்தியாவால் ஒரு பில்லியன் டொலர் கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, புத்தாண்டு காலத்தில் எவ்வித தடையுமின்றி அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.” – என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
அமைச்சரின் டில்லி பயணத்தின்போது, இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் வசதிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நிதி அமைச்சர்,
”இந்தியா எமக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. மருந்து, அத்தியாவசியப் பொருட்களுக்காக தற்போது கடன் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு பிறகு இதனை திருப்ப வழங்க வேண்டும் வேறு எந்த நிபந்தனைகம் இல்லை என்றும் தெரிவித்தார்.”
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 19, 2022
Rating:

கருத்துகள் இல்லை: