Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தாஹிர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், அமைப்பாளரும், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான என்.டி.எம்.தாஹிர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் முன்னிலையில்நேற்று சனிக்கிழமை (02)தனது ஆதரவாளர்கள் சகிதம் உத்தியோகபூர்மாக இணைந்துகொண்டார். புத்தளம் தில்லையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான அமீர் அலி, பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம்.நவவி உட்பட உலமாக்கள், மக்கள் காங்கிரசின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தாஹிர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார். Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 04, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.