காத்தான்குடி கோட்டக்கல்விப் பனிப்பாளரின் வாழ்த்துத் செய்தி
காத்தான்குடி மத்திய கல்லூரியின் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கால் பந்தாட்ட அணி (under 16 football team) மாகாண மட்ட Champion ஆக தெரிவு செய்யப் பட்டதனையிட்டு மகிழ்ச்சியடைவதுடன் இவர்களின் வெற்றி மட்டக்களப்பு மத்தி வலயத்திற்கு பெருமை சேர்ப்பதாகவும் காத்தான்குடி கோட்டக்கல்விப் பனிப்பாளர் AGM.ஹக்கீம் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த அரை இறுதிப் போட்டியில் சிறந்த அணிகளில் ஒன்றான கிண்ணியா மத்திய கல்லூரி அணியை எதிர்த்தாடிய காத்தான்குடி மத்திய கல்லூரி அணியினர் இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டதனையிட்டு வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.
இந்த வெற்றிக்கு உதவிய அதிபர், பயிற்றுவித்த ஆசியர்கள் குழாத்திற்கும், பாடசாலை மற்றும் பெற்றோர் சமூகத்திற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இதன் போது தெரிவித்தார்.
(பிரதம ஆசிரியர்)
காத்தான்குடி கோட்டக்கல்விப் பனிப்பாளரின் வாழ்த்துத் செய்தி
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 06, 2023
Rating:

கருத்துகள் இல்லை: