சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளராக இனாமுல்லாஹ் நியமனம்.
சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் (Brigade) (முதலுதவி படைப்பிரிவு) மட்டக்களப்பு-C- மாவட்ட ஆணையாளராக SLHM.இனாமுல்லாஹ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் பிரிகேட் படைப்பிரிவின் மட்டக்களப்பு
-C-மாவட்ட ஆணையாளராக SLH.M.இனாமுல்லாஹ் நியமனம் செய்யப் பட்டதனையிட்டு பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளராக இருந்து தனது பணிகளை சிறப்பாகச் செய்து வரும் SLHM. இனாமுல்லாஹ் அவர்களுக்கு குறிப்பாக அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பாடசாலை சமூகம், கல்வியாளர்கள், பெற்றோர்கள் என பலரும் தங்கள் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இவர் பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி, விளையாட்டு உத்தியோகாஸ்தர்களுக்கான பயிற்சிப்பட்டறை உற்பட , சிறுவர்களுக்கான பல Kids வேலைத் திட்டங்களையும் ஏற்பாடு செய்து அவற்றை திறன்பட வழங்கி வருவதுடன் மாணவர்களுக்கு பெறுமதியான சான்றிதழ்களையும் பெற்றுக் கொடுத்து, மாணவர்களை தேசியமட்டம் வரை அழைத்துச் சென்று வழி நடாத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவகத்தின் kids Athletic Coordinator ஆக கடமையாற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்)
சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளராக இனாமுல்லாஹ் நியமனம்.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 26, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 26, 2024
Rating:


கருத்துகள் இல்லை: