காத்தான்குடி கல்விமான் அம்சா கௌரவிக்கப்பட்டார்....
காத்தான்குடி கல்விமான்களில் ஒருவரான அல்ஹாஜ்.PMM.Amza(SLOS) காத்தான்குடி சமூகம் சார்பாக காத்தான்குடி சம்மேளனத்தினால் கௌரவிக்கப்பட்டார்.
ரஷ்யா நாட்டிற்கான இலங்கை பதில் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அல்ஹாஜ்.PMM.Amza(SLOS) அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு (2024.05.25 சனிக்கிழமை) மாலை 04:30 மணிக்கு சம்மேளன கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.
சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ்.AMM. தௌபீக் -Eng அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க். MMM. இல்ஹாம் பலாஹி BA நெறிப்படுத்தினார்.
வரவேற்புரை மற்றும் தலைமையுரையினை சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ்.AMM.தௌபீக்-Eng ஆற்றியதோடு, கௌரவிப்பினை பெறவுள்ள அதிதி தொடர்பான அறிமுகம் மற்றும் அவர் சேவைகள் தொடர்பான உரையினை சம்மேளன உப-தலைவர் அல்ஹாஜ்.MCMA. சத்தார் BSc ஆற்றினார்.
தனது சேவைகள், சேவைக்கால அனுபவங்கள், மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் தொடர்பான அனுபவப் பகிர்வினை அல்ஹாஜ்.PMM.Amza(SLOS) அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
அதனையடுத்து, நிகழ்வின் பிரதான அம்சமான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன், பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னம் வழங்கியும் அல்ஹாஜ்.
PMM.அம்ஜா (SLOS)
கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்படத்தக்கது.
இந்நிகழ்வில் சம்மேளன தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவி தாங்குனர்கள், சம்மேளன நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
தகவல்.
சம்மேளன ஊடகப் பிரிவு.
காத்தான்குடி கல்விமான் அம்சா கௌரவிக்கப்பட்டார்....
Reviewed by www.lankanvoice.lk
on
மே 26, 2024
Rating:

கருத்துகள் இல்லை: