புதிய ஆசிரியர் நியமனம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு.
(ஏ.எல்.டீன் பைரூஸ்)
புதிய ஆசிரியர் நியமனம் தொடர்பில் கிழக்கு மாகான கல்வி அமைச்சின் செயலாளரின் 2024.05.24 திகதிய எழுத்து அறிவிப்பு.
கிழக்கு மாகாணத்தின் உயர்தர பாடங்களுக்கான ஆசிரியர் நியமனத்தின் பொருட்டு 2024.03.30 ம் திகதி நடாத்தப்பட்ட பரிட்சை மற்றும் 2024.05.16ஆம் திகதி தொடக்கம் 2024.05.22ஆம் திகதி வரை நடைபெற்ற நோ்முகப் பரிட்சையின் பொருட்டும் ஆசிரியர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான
ஆசிரியர்கள் நியமனங்கள் எதிர்வரும் 2024.05.28 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் ஒரு மணிக்கு திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள இந்துக் கலாச்சார மண்டபத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட நியமனதாரிகள் கீழ் குறித்தவாறு ஆடை அணிந்து வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
பென்கள் -வெள்ளை நிற சாரி.
ஆண்கள் - வெள்ளைநிற மேற்சட்டை - கருப்பு நிற காட்சட்டை மற்றும் கருப்பு நிற கழுத்துப்பட்டி.
மேலும் இந்நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட நியமனதாரிகள் அனைவரும் காலை 10 மணிக்கு முன்னதாக இந்துக் கலாச்சார மண்டபத்திற்கு வருகைதந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.
புதிய ஆசிரியர் நியமனம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
மே 26, 2024
Rating:

கருத்துகள் இல்லை: