அரச சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழு
அரச சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விடயங்களை ஆராய்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் குறித்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்காக குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக (27) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
01. சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமித்தல்
அரச சேவையில் பல்வேறு ஊழியர்களுக்கிடையே நிலவுகின்ற சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் அந்தந்த தொழிற்சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த சம்பள ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விடயங்களை ஆராய்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் குறித்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக நிபுணத்துவக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழு
Reviewed by www.lankanvoice.lk
on
மே 29, 2024
Rating:

கருத்துகள் இல்லை: