Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு தொடர்பில் அமைச்சரின் எச்சரிக்கை...

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின்  மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மீள் மின் இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணம்  தற்போது குறைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2022 மே மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னரான காலப்பகுதியில் 70 இலட்சம் மின்பாவனையாளர்கள் மின்விநியோக கட்டமைப்பில் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

பல மணித்தியாலங்கள் மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டன. ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து மின்கட்டமைப்பில் கொள்கை  ரீதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

மின்விநியோக கட்டமைப்பின் கொள்கை திருத்தம் செய்யப்பட்டதால்  தற்போது பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

கட்டணத்தை தொடர்ந்து குறைக்க முடியுமா என்று முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம் விநியோகிக்கப்பட்டு நிலுவை கட்டணம் செலுத்தாத சுமார் 10 இலட்சம் மின்பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் நிலுவை கட்டணத்தை செலுத்தாவிடின் மின்விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டு, மின்பாவனைக்கான கணக்கும் இரத்து செய்யப்படும்.

மின்கட்டணத்தை செலுத்தாத தரப்பினரை இலக்கு வைத்து அவர்களுக்காக விநியோகத்தை துண்டிக்குமாறு எவருக்கும் பொறுப்பு வழங்கவில்லை.

கட்டணம் செலுத்தாவிடின் மின்விநியோகம் துண்டிக்கப்படும் இது நான் அமைச்சரான பின்னர் எடுத்த தீர்மானமல்ல, காலம் காலமாகவே அமுல்படுத்தப்படுகிறது.

சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம் வழங்கப்பட்டு,கட்டணம் செலுத்துவதற்கு காலவகாசம் வழங்கப்படும். அந்த காலப்பகுதிக்குள் கட்டணத்தை செலுத்தாவிடின் தான் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.

மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு, மீள இணைப்பு பெற்றுக்கொள்ளப்படும் போது அறவிடப்படும் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை உமா ஓயா பல்நோக்கு திட்டத்தின் மூலம் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் மின்சார அலகுகள் இணைக்கப்பட்டுள்ளது.

உமா ஓயா திட்டத்தின் ஊடாக தேசிய அமைப்பில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மின்சார அலகுகளின் எண்ணிக்கை காரணமாக, எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவில் மின்சார நுகர்வோர் பயனடைய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் எதிர்வரும் ஜூலை மாதம் மின்சாரக் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் அதே வேளையில் அந்த அனுகூலத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு தொடர்பில் அமைச்சரின் எச்சரிக்கை... Reviewed by www.lankanvoice.lk on மே 07, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.