பல கோரிக்கைகளை முன்வைத்து கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு கோரி கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பல கோரிக்கைகளை முன்வைத்து கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் இரவு வேளைகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிவில் பாதுகாப்பு சேவைக்கு உதவி வழங்குமாறு கல்வி அமைச்சு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம். திலகா ஜயசுந்தர பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் கமல் குணரத்னவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு இன்றும் (ஜூன் 24) நாளையும் (ஜூன் 25) சுகயீன விடுமுறை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பணிப்புரையின் பிரகாரம் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் உள்ள ஆசிரியர் ஊழியர்கள், மாணவர் சமூகம், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் அமைப்பின் சொத்துக்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 25, 2024
Rating:
.jpg)
கருத்துகள் இல்லை: