Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்

அரசியல் தீர்வுகளைத் தேடும் இந்நாட்டு மக்கள் பொருளாதாரத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தவில்லை – மன்னாரில் இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி.

அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மன்னாரில் (16) இடம்பெற்ற இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

“சுபீட்சமான எதிர்காலத்திற்கான பயணம்” என்ற பெயரில் இளைஞர் அமைப்பு ஏற்பாடு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு, 2023/2024 உயர்தரப் பரீட்சைக்கு தெரிவான மாணவர்களுக்கு ஜனாதிபதியால் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு வட மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது இளைஞர் மத்தியில் சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த ஜனாதிபதி, அவர்களின் கேள்விகளுக்கும் சாதகமான பதில்களை வழங்கினார்.

கொவிட் – பொருளாதார நெருக்கடியின் காரணமாக 4 வருடங்களாக தொழில்களை வழங்க முடியாமற்போனதோடு, தொழில் கிடைத்த பலரும் அவற்றை இழந்து நிற்கும் நிலைமையும் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அதனால் புதிய பாதையில் சென்று தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டுமா, இல்லாவிட்டால் பழைய முறையில் சென்று வீழ்ச்சியடைவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதனையடுத்து மன்னார் மாவட்ட வர்த்தர்களுடன் நேற்று (16) இடம்பெற்ற சந்திப்பில், அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிப் பயணிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் பெருமளவான முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகைத் தருவர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

காலத்துக்குக் காலம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல், சரியான பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ச்சியாகப் பின்பற்றினால் நாடு முன்னேற்றமடையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்காகவே பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தைச் சமர்பித்திருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதனை எந்தவொரு அரசாங்கமும் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்.

நீண்டகாலமாக அரசியல் ரீதியான தீர்வைத் தேடும் இந்நாட்டு மக்கள், ஒருபோதும் பொருளாதாரத்தின் பக்கமாக தீர்வைத் தேடவில்லை என்றும், சரியான பொருளாதாரக் கொள்கையின் ஊடாக மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

சரிவடைந்திருந்த பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் கட்டியெழுப்ப தன்னால் முடிந்ததெனத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதாரம் வலுவடையும்போது, அதன் பலன்கள் சகல தரப்பினருக்கும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பரந்தளவான அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண ஆளுநர். பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்டவர்களும் அரசியல் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 17, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.