Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பொதுவான வானிலை முன்னறிவிப்பு..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்புஇ தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

2024 ஜூன் 27ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2024 ஜூன் 26ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல்இ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டிஇ நுவரெலியா காலி மற்றும் மாத்தறைஇ மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும்இ அம்பாறை மற்றும் மட்டக்டகளப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்குஇ வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலைஇ ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


பொதுவான வானிலை முன்னறிவிப்பு.. Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 27, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.