ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு - ஏறாவூர் வலய காரியாலய திறப்பு விழா பிரதம அதிதியாக அப்றாரி jp கலந்துகொண்டார்.
நாடளாவிய ரீதியில் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்பாட்டுக்
காரியலயங்களைத் திறக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு - ஏறாவூர் வலய காரியாலய திறப்பு விழா அக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக்கான பிரதம அமைப்பாளர் ஏ.எம்.எம்.பிர்தௌஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் பலப்பிட்டிய பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.பிஎம். . அப்றாரி -jp- இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மும்மதப் பெரியார்கள், , வலய அமைப்பாளர்கள், மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் இதில் பிரசன்னமாகி இருந்தனர்.
அண்மையில் மரணமடைந்த ஐக்கிய தேசியக்கட்சியின் ஏறாவூர் அமைப்பாளர் ஏசிஎம்.கியாஸ் இங்கு நினைவுகூரப்பட்டு அவருக்கான விசேட பிரார்த்தனையுடன் நிகழ்வு ஆரம்பமானது.
மௌலவி ஏ.எம்.றியாஸ் பையாஸி பிரார்த்தனை நடாத்தினார். சமீபத்தில் தேர்தல் நடைபெறுமென்ற எதிர்பார்ப்புடன் இதுபோன்ற செயற்பாட்டுக் காரியாலயங்கள் நாட்டின் சகல பாகங்களிலும் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வட்டார ரீதியில் திறக்கப்படும் இக்காரியாலயங்கள் ஊடாக பொதுமக்களுக்கான பணிகள்யாவும் மேற் கொள்ளப்படவுள்ளன எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(சிரேஷ்ட ஊடகவியலாளர்
எம்.ஜி.ஏ.நாஸர்)
ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு - ஏறாவூர் வலய காரியாலய திறப்பு விழா பிரதம அதிதியாக அப்றாரி jp கலந்துகொண்டார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 15, 2024
Rating:

கருத்துகள் இல்லை: