ஆசியக் கிண்ணம் வென்றது இலங்கை மகளிர் அணி!
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றிவாகை சூடியது.
தம்புள்ளையில் இன்று மாலை நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 166 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை மகளிர் அணியின் சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம 69 ஓட்டங்களையும், அணித்தலைவரி சமரி அத்தப்பத்து 61 ஓட்டங்களையும் பெற்றனர்
ஆசியக் கிண்ணம் வென்றது இலங்கை மகளிர் அணி!
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 29, 2024
Rating:
.jpg)
கருத்துகள் இல்லை: