பாதுகாப்பு அதிகாாிகள், தேசத்திற்கு பங்காற்றியவா்களுக்குமான மகத்தான கௌரவிப்பு .நிகழ்வு
எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் தேசத்திற்காய் நாம் பிரஜை விருது வழங்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி அல்-மனாா் அறிவியல் கல்லூாியின் அப்துல் ஜவாத் மண்டபத்தில் சனிக்கிழமை
(27) எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளா் ஜே.எல்.எம்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாதுகாப்புத் தரப்பைச் சோ்ந்த உயா் அதிகாாிகளுக்கும் தேசத்திற்கு பங்காற்றியவா்களுக்கும் கௌரவமளிக்கப்பட்டது.
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிாியா் dr றமீஸ் அப்துல்லாஹ், கலை,கலாசார பீட பீடாதிபதி பேராசிாியா் எம்.எம்.பாஸில்.பேராசிரியர் கலாநிதி இஸ்மாயில்.கலாநிதி எ. எ. எம். நுபைல் senior lecture எ.எம்.றியாஸ் அகமட்
சிரேஷ்ட விரிவுரையாளர்.மட்டக்களப்பு வா்த்தகா் சங்கத் தலைவா் கே.எம்.கலீல், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளா் மர்சூக் அகமட் லெவ்வை உட்பட புத்திஜீவிகள், ஊா் பிரமுகா்கள், ஊடகவியலாளா் எனப் பலரும் கலந்து கொண்டனா்.
இந் நிகழ்வில் பாதுகாப்புத் தரப்பு அதிகாாிகள், தேசத்திற்கு பங்காற்றியவா்கள் 50 போ் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அதிகாாிகள், தேசத்திற்கு பங்காற்றியவா்களுக்குமான மகத்தான கௌரவிப்பு .நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 29, 2024
Rating:

கருத்துகள் இல்லை: