Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி ஊடக விருது விழா...

நாட்டில் சிறந்த ஊடகக் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்காகவும், ஊடகவியலாளர்களினால் மேற்கொள்ளப்படும் பணிகளைப் பாராட்டுவதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்கும் 2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி ஊடக விருது விழாவை இரண்டாவது முறையாகவும் நடத்துவதற்கு புத்தசாசனம், சமயம், மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தயாராகி வருகிறது.

செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையதளங்கள், ஊடக ஆய்வு மற்றும் பாடசாலை ஊடகம் ஆகிய துறைகளுக்கு 50 விருதுகளும், ஊடகத்துறையில் தனித்துவமான பணியை ஆற்றிய 04 நிபுணர்களுக்கு வழங்கப்படும் வாழ்நாள் விருது உட்பட மொத்தம் 54 விருதுகள் 2023 ஆம் ஆண்டில் படைப்புகளைப் பாராட்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பொருட்டு 2023ஆம் ஆண்டில் அச்சு ஊடகத்தில், இலத்திரணியல் ஊடகத்தில் மற்றும் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட, ஒளி – ஒலிபரப்பு செய்யப்பட்ட தமது ஆக்கங்கள் மற்றும் ஊடக ஆய்வுகளையும் சமர்ப்பிக்குமாறு அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2023.01.01. முதல் 2023.12.31 வரை பிரசுரிக்கப்பட்ட ஒளி – ஒலிபரப்பு செய்யப்பட்ட ஆக்கங்கள் மாத்தரமே பரிசீலிக்கப்படும் மற்றும் விருதுகளுக்காக சமர்ப்பிக்கப்படும் ஆக்கங்னகள்; சுயாதீனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை, விண்ணப்பங்கள் நிறுவனத் தலைவர்களின் ஊடாக அனுப்பப்பட வேண்டும், மேலும் சுயாதீனமாக தனது சான்றுப்படுத்தலுடனும் விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்படும் ஆக்கங்கள்/ படைப்புக்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொழில் துறை மற்றும் உரிய துறையில் நிபுணத்துவம் கொண்ட துணைக் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்படும் என்பதுடன், அத்தீர்மாணமே இறுதித் தீர்மாணமாகும்.

இதற்கான படைப்புக்களை 2024.10.08 ஆம் திகதி முதல் 2024.10.30 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும், மேலதிக தகவல்களையும் விண்ணப்பப் படிவத்தையும் www.media.gov.lk என்ற இணையத்தளத்தினூடாகவோ அல்லது அமைச்சுக்கு நேரடியாக சென்றோ பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த படைப்புகளை மேலதிக செயலாளர் (அபிவிருத்தி, திட்டமிடல் மற்றும் தகவல்), புத்தசாசனம், சமயம், மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, இல. 163, கிருலப்பன மாவத்தை, பொல்ஹேங்கொட, கொழும்பு 05, என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதுடன், கடித உரையின் இடதுபக்க மேல் மூலையில் தமது ஆக்கங்களுக்கு பொருத்தமான துறை மற்றும் போட்டி இலக்கம் என்பவற்றை தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்.

ஊடக அமைச்சின் அபிவிருத்திப் பிரிவின் 0112513737 / 0112513459 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி ஊடக விருது விழா... Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 11, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.