வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் கடந்த 26 ஆம் திகதி உத்தரவிட்டது.
இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
வைத்தியர்களைத் தொலைபேசியில் அச்சுறுத்தியமை, பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணையின்போதே அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 09, 2024
Rating:

கருத்துகள் இல்லை: