Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இராணுவ உதவியை நிறுத்துவோம்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

காசாவில் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்காவிட்டால் இராணுவ ஒத்துழைப்பை இரத்து செய்ய நேரிடும் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

காசாமீது இஸ்ரேல் தொடுத்துவரும் தாக்குதல்களில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

இந்த போரால் காசாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இதற்கிடையில், காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வந்த அங்குள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என இஸ்ரேல் அரசிடம் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் இராணுவ ஒத்துழைப்பு ரத்து செய்யப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

“காசாவிற்குள் சில மனிதாபிமான உதவிகள் சென்றடைந்தாலும், அவை போதுமானதாக இல்லை. நாங்கள் விரைவான மாற்றத்தை காண விரும்புகிறோம். ஒரு மாதத்திற்குள் காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால், இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் இராணுவ ஒத்துழைப்பு ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.” – எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இராணுவ உதவியை நிறுத்துவோம்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 16, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.