அமைச்சர் சுனில் ஹந்துனெந்த்தியினால் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் திறந்து வைப்பு.
(அஹமட் இர்ஷாட்)
தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் பலப்படுத்தும் முகமாக கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அமைச்சரும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினரும் தோழருமான சுனில் ஹந்துன்னெந்தியினால் (22.12.2024) மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் மாவட்ட காரியாலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கிழக்கு மாகான ஆளுனரின் இணைப்பதிகாரி உமர் ஹத்தாப் அப்துல்லாஹ்,
தோழர்களான எம்.ஏ.சி.நியாஸ்த்தீன், எம்.பீ.எம்.பிர்தெளஸ் நளீமி, திலீபன், நாதன் ஆகியோர்களுடன் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நிறைவேற்று குழு உறுப்பினர்கள் என பலரும்கலந்து கொண்டனர்.
மேலும், இதற்கு முன்னதாக மாவட்ட மாநகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களை
சந்தித்த தோழர் சுனில் ஹந்துன்னெந்தி, தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டில் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தியதோடு எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் பற்றியும் கலந்துறையாடப்பட்டதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் சுனில் ஹந்துனெந்த்தியினால் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் திறந்து வைப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 24, 2024
Rating:

கருத்துகள் இல்லை: