• Home
  • About Us
  • Contact Us
lankanvoice Media Network

Top Ad unit 728 × 90

Lankanvoice
  • செய்திகள் [News]
  • _இலங்கை
  • _உலகம்
  • அரசியல் [Political News]
  • விளையாட்டு [Sports New]
  • கட்டுரைகள் [Articles]
  • _கவிதைகள் [Poems]
  • கல்வி [Education]
  • _தொழில்நுட்பம்
  • நேர்காணல் [Interview]

இலங்கைச் செய்திகள்

Local News
Home Politics ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

www.lankanvoice.lk டிசம்பர் 22, 2024 Politics

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட தூதுக்குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் திரு. Takafumi Kadono  பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். 

இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கிய பங்கு குறித்து இந்த கலந்துரையாடலின் போது மீண்டும் வலியுறுத்தப்பட்டதுடன், இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமையாக புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுவதை உறுதிசெய்ய பாடசாலைக் கட்டமைப்பு, அதிபர் ஆசிரியர் பயிற்சி மற்றும் மதிப்பீட்டு பொறிமுறைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் இதன்போது வலியுறுத்தினார். 

அதிபர் ஆசிரியர் பயிற்சியை மேம்படுத்துதல் உட்பட, முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களின் மூலம் கல்வித் துறையில் உள்ள சவால்களைத் தீர்ப்பதில் தங்கள் பங்களிப்பு குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரதிநிதிகள் மேலும் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் இலங்கை பிரதிநிதிகள் குழுவில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவே, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார, ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் பதில் பணிப்பாளர் ரஞ்சித் கருசிங்க, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தனஞ்சி அமரசிங்க மற்றும் வெளிநாட்டு அமைச்சின் பொருளாதார விவகார பணிப்பாளர் லஷிங்கா தம்முல்லகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு


ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 22, 2024 Rating: 5

Tags :

Politics
  • Tweet
  • Share
  • Share
  • Share
  • Share
www.lankanvoice.lk

About Lankanvoice Media

Number of Entries : 500+

Leading News Agency in Eastern Provience.

Politics

கருத்துகள் இல்லை:

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

Translate

76th Happy Independence Day

76th Happy Independence Day

Since 2021

Flag Counter

Ads

Ads

Ads

Ads
Contact us

பிரபலமான இடுகைகள்

  • பாலமுனை வைத்தியசாலையில் இடை நிறுத்தப்பட்டுள்ள அம்புலன்ஸ் சேவையினை மீழவும் ஆரம்பியுங்கள் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சியாத் வேண்டுகோள்.
    [ஏ.எல். டீன் பைரூஸ் ஊடகவியலாளர்] மண்முனைப் பற்று பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று 27.06.2025 ஆரயம்பதி பிரதேச சபை மண்டபத்தில் இட...
  • முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் – ஒழுக்கங்கள் மற்றும் தவிர்க்கவேண்டிய அனாசாரங்கள் – சடங்குகள்...?
    அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியன. அவனுடைய தூதர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார், தோழர்கள் மீது ஸலாதும், ஸலாமும் நிலவுக! நம்பிக்கையாளர்க...
  • உலக வங்கி சிறிலங்காவிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
    இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில்  தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என நேபாளம், மாலைதீவு ம...
  • குறைந்தது மூன்று காங்கிரசும் இணைந்தாவது 13 க்கான முன்மொழிவுகளை முஸ்லீம்கள் சார்பாக முன்வைக்க வேண்டும்!
    எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன் கட்சிகள் 13 திருத்தம் சம்பந்தமான தங்களது முன்மொழிவுகள் ஆலோசனைகளை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ள நிலையில்...

Recent Posts

ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Mars...

Interested

  • இக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.
    சிரேஷ்ட சட்டத்தரணி  MIM.அஸ்வர்  எமது நாட்டின்  இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...
  • இரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை
    இரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...
  • ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை
    (பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...
  • பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.
    நடைபெற  இருக்கின்ற பாராளுமன்றத்  தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...
All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.