காத்தான்குடி பொலிஸ் நிலையத்தால் காத்தான்குடி கடற்கரையில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்.
ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கமைய நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல் வேறு செயற்திட்டங்களின் தொடரில்
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை சனிக்கிழமை (25.01.2025) காத்தான்குடி கடற்கரை சிரமதானம் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் கே.எம்.இக்பால் தலைமையில் இடம் பெற்றதுடன் நிகழ்வு தொடர்பான விபரங்களை புதிய காத்தான்குடி கிழக்கு 167/B சிவில் பாதுகாப்பு குழுவின் உப தலைவர் அம்ஜத் லத்தீப் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்வில் புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் மௌலவி தௌஸீர் அவர்கள் உபன்யாசம் நிகழ்த்தினார்.
சமூக சுற்றாடல் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எம்.ஜவாஹிர், பெருங் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரஹீம் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் , உப குழுக்களின் தலைவர்கள் நிர்வாக உறுப்பினர்கள் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தால் காத்தான்குடி கடற்கரையில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 26, 2025
Rating:

கருத்துகள் இல்லை: