அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் நாளை பதவியேற்பு
இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் பயன்படுத்த உள்ள பைபிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, பதவியேற்பு விழாவில் டிரம்ப், மறைந்த தனது தாய் தனக்கு கொடுத்த பைபிள் மற்றும் மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள் ஆகியவற்றின் மீது உறுதிமொழி எடுக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற போதும், லிங்கனின் பைபிளை கொண்டு டிரம்ப் பதவியேற்றிருந்தார். முன்னதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, கடந்த 2009 மற்றும் 2013 ஆகிய இருமுறை ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோதும் லிங்கனின் பைபிளை பயன்படுத்தி உறுதிமொழி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: