சுயநல கும்பலின் கைகளுக்குள் அமெரிக்கா: இறுதி உரையில் பைடன் எச்சரிக்கை
மிகப் பெரிய செல்வந்தர்களின் கைகளில் அமெரிக்காவின் ஆட்சி அதிகாரம் செல்வதால் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நிகழ்த்திய தனது இறுதி உரையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அவர் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நேற்று நாட்டுமக்களுக்கு அதிகாரபூர்வ இறுதி உரையை நிகழ்த்தினார்.
இதன்போது “இன்று அமெரிக்காவில் ஒரு அதீத செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட ஒரு சுயநலக்குழு உருவாகி வருகிறது. இது நமது முழு ஜனநாயகத்தையும், நமது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும், அனைவரும் முன்னேறுவதற்கான நியாயமான வாய்ப்பையும் அச்சுறுத்துகிறது. ஒரு சில அதி-செல்வந்தர்களின் கைகளில் அதிகாரம் ஆபத்தான முறையில் குவிகிறது. அவர்களின் அதிகார துஷ்பிரயோகம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுவிடும்.” என பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ{க்கும் இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது மத்திய கிழக்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த ரத்தக்களரியை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும். அமெரிக்காவின் நலனுக்காக எங்கள் குழு செய்தவற்றின் முழு தாக்கத்தையும் உணர நேரம் எடுக்கும். ஆனால் விதைகள் நடப்பட்டுள்ளன. அவை வளரும். அவை வரவிருக்கும் பல பத்தாண்டுகளுக்கு பூத்துக்குலுங்கும்.” எனவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: