முகநூல் உள்ளிட்ட சில வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ள வதந்தி செய்தியின் உண்மை நிலை குறித்து வெளியிட்டுள்ள அந்த அறிக்கையிலே மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் வட்டார குழுத் தலைவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் வழிகாட்டுதலிலும் தேசிய மக்கள் சக்தி கட்சி நிந்தவூர் கிளையின் முதன்மை செயற்பாட்டாளர் சம்சுன் அலி தலைமையிலும் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி இடம்பெற்றது.
எனினும், தற்பொழுது முகநூல் உள்ளிட்ட சில வலைத்தளங்கள் ஊடாக போலியான முறையிலும், ஊர்ஜிதம் இல்லாமலும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்பாடுகளை அவமதிக்கும் வகையில் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடம் முறையான கட்டணம் செலுத்தாமல் தேசிய மக்கள் சக்தி கட்சியால் கையாளப்படுகின்றது என்ற செய்தி பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தெளிவூட்டும் வகையில் நிந்தவூர் தேசிய மக்கள் சக்தி கிளை முறையான அனுமதி மற்றும் கட்டணம் செலுத்தியே பெப்ரவரி 28 ஆம் திகதி கேட்போர் கூடத்தினை பயன்படுத்தியது என்பதனை இத்தால் உறுதிப்படுத்தியுள்ளோம்.
அதற்கான பற்றுச்சீட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
போலியான கதைகள் ஊடாக அண்மைக் காலங்களில் தேசிய மக்கள் சக்தி கட்சி செயற்பாடுகளில் சேறு பூச சிலர் நினைக்கின்றமை குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை: